மரியன்ன ஸ்டீன் ஈசாக் (மொழிபெயர்ப்பாளர்), நாகலிங்கம் கஜேந்திரன் (தொகுப்பாசிரியர்). டென்மார்க்: நாகலிங்கம் கஜேந்திரன், தமிழ்-டெனிஸ் சமூக இலக்கிய இணைவகம், 1வது பதிப்பு, ஜனவரி 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).
310 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ., ISBN: 978-87-973509-0-4.
ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பான திருக்குறளை டேனிஷ் மொழியில் மரியன்ன ஸ்டீன் ஈசாக் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூலில் தமிழ்-டேனிஸ்-ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் திருக்குறளை தனிநூலாக்கியுள்ளனர். பல்வேறு வாழ்த்துச் செய்திகளுடன் முன்னுரை, இந்நூலைப்பற்றி, திருக்குறள் முதலாம் பகுதி தொடக்கம்,
திருக்குறள் இரண்டாம் பகுதி தொடக்கம், திருக்குறள் மூன்றாம் பகுதி தொடக்கம், திருக்குறள் குறித்து அறிஞர்களின் கருத்துகள், துணை நின்ற நூல்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்நூல் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளது.