16058 திருமந்திர விருந்து-1.

சு.செல்லத்துரை (மலராசிரியர்). கொழும்பு: திருமந்திரப் பணிமன்றம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).

xxx, 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ., ISBN: 978-624-5150-00-7.

இணுவில்-இளவாலை திருமதி சிவகாமசுந்தரி செல்லத்துரை அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவாக 11.08.2019 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர். கொழும்பிலும் இணுவிலிலும் திருமந்திரம் பயில்பவர்களையும் ஏனையோரையும் ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மலர். திருமந்திரம் தொடர்பான பல்வேறு ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. வாழ்த்தும் வருபொருளும், பாயிரப் பகுதி, முதல் தந்திரம், சைவப் புலவர் சு.செல்லத்துரையின் கட்டுரைகளும் கலைப் படைப்புகளும் ஆகிய நான்கு பிரிவுகளில் இந்நூலில் படைப்பாக்கங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சைவப் புலவர் சு.செல்லத்துரையின் கட்டுரைகளாக, திருமூலர் காட்டும் சிவநெறி, அட்டாங்க யோகம், புலனடக்கம், திருமூலரின் மறைபொருள் கூற்றுக் கவியின்பம், திருமூலர் வில்லிசை, திருமூல நாயனார் கதாப்பிரசங்கம், திருமந்திர வினா-விடை 1, திருமந்திர வினா-விடை 2, திருமந்திரம் பிறந்த கதை- பாடலும் ஆடலும், திருமந்திரப் பொன்மொழிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Nachfolgende Besten Innerster planet Spielautomaten

Content Welches Passiert Within Einem Verbindungsabbruch Via Diesem Inanspruchnahme? Die Besten Spielautomaten In Deinem Computer & Smartphone Inoffizieller mitarbeiter Zusammenfassung Unterm strich ist selbst in