16061 இந்துக் கற்கைகளை வளமூட்டிய மேலைத்தேசத்து ஆளுமைகளும் ஆய்வுகளும்.

ச.முகுந்தன். கொழும்பு 6 : குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xvii, 185 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-748-6.

இந்துப் பண்பாட்டுக் கற்கைகள் பற்றிய திரண்ட பரிமாணத்தைப் புரிந்துகொள்வதற்கு அவை குறித்த மேலைநாட்டாய்வாளர்களின் நோக்குநிலையை அறிந்துகொள்வது அவசியமாகும். இந்நூல் இத்தேவையினை முழுமையாகப் பூர்த்திசெய்கின்றது. இந்நூலில் இந்துக் கற்கைகள் குறித்து மேலைத்தேச ஆய்வாளர்களிடையே ஆர்வம் தோன்றியமைக்கான சமூக வரலாற்றுப் பின்னணி, ஆசியக் கழகமும் சேர் வில்லியம்ஸ் ஜோன்ஸீம், இந்துக் கற்கைகளும் சாள்ஸ் வில்கின்ஸ{ம், இந்து நாகரிக ஆய்வுப் புலத்தில் H.T.கோல்புறூக்கின் ஆய்வு முனைப்புகள், இந்துக் கற்கைகள் பற்றிய ஆய்வுகளின் மடைமாற்றியாக மக்ஸ்முல்லர், இந்துப் பண்பாட்டுக் கற்கைகள் தொடர்பில் டாக்டர் ஜோர்ஜ் புல்ஹரின் பன்முக ஆளுமை, இந்துக் கற்கைகளை வளமூட்டிய H.H.வில்சன் (1786-1860), இந்து மெய்யியல் ஆய்வுகளும் போல் டொய்சனும், இந்துப் பண்பாட்டுக் கற்கைகளும் மேலைநாட்டுக் கல்வி நிறுவனங்களும், இந்தியத் தாந்திரீகம் பற்றிய புரிதலில் சேர் ஜோன் வூட்றோவ் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கலாநிதி சயனொளிபவன் முகுந்தன் நல்லூர் கந்தர்மடத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்தில் சிறப்புக் கலை பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். பண்பாட்டியற் கற்கைகளில் முதுகலைமாணிப் பட்டத்தையும் இந்து நாகரிகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

12433 வித்தியாதீபம்: இதழ் 1,2: 1994/1995

மலர்க்குழு.வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு 5: சரசு பதிப்பகம்). 124 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. வவுனியா தேசிய கல்வியியற்