16100 நல்லைக்குமரன் மலர் 2001.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

130 + (46) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 2001ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன் தெய்வீகம் பரவட்டும் (இ. இராமலிங்கம்), இறைபணியே எம்பணி (இ. இரத்தினசிங்கம்), நல்லூர்க் கந்தன் அர்ச்சனை மாலை (நா.க.சண்முகநாதபிள்ளை), நல்லூரா சொல்லு நலம் (த.ஜெயசீலன்), பக்கம் இருந்தெமைக் காப்பவன் (வ.யோகானந்தசிவம்), நல்லைக் கந்தன் பிள்ளைத்தமிழ் (ச.தங்கமாமயிலோன்), நல்லூரான் திருக்கோலம் காணுவோமடா ! (சி.சா.சுதந்திரன்), தமிழர் வாழ்வில் பூமாலை (மனோன்மணி சண்முகதாஸ்), பெரிய புராணத்தில் சைவசித்தாந்தம் (சந்திரிகா நவரத்தினம்), மஹோற்சவங்களில் நவசந்திகளின் முக்கியத்துவம் (கே.எஸ்.சிவஞானராஜா), தெய்வம் இருப்பது எங்கே? (கா.கணேசதாசன்), நல்லை நகர் வீதியிலே நல்லதொரு தேரோட்டம் (ர.சாருஜா), திருவண்ணாமலை (பொ.சிவப்பிரகாசம்), ஈழத்து முருக வழிபாட்டு மரபில் வன்னிப் பிரதேசம் (நடேசப்பிள்ளை ஞானவேல்), முருகவழிபாடு – ஒரு நோக்கு (வீ. சிவசாமி), காத்திடுவாய் நல்லைக் குமரா! (நாகமணி மகேந்திரலிங்கம்), அன்பு நெறி (ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா), குமாரதந்திரம் கூறும் சுப்ரம்மண்யரின் மூர்த்திபேதங்கள் (பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன்), தீயவை புரிந்தாரேனும் ….. ! (மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்), தமிழர் திருமண முறைகள் ஓர் நோக்கு (சுமதி கனகரெட்னம்), நல்லைப் பதியுறையும் நாயகரே  இராசையா ஸ்ரீதரன்), சைவமும் தமிழும் இரு கண்கள் திருமுறைகளை ஓதி உய்யுங்கள் (செ.மதுசூதனன்), அடியேன் உன் அடைக்கலமே (நயினை கி.கிருபானந்தா), ஊழ்வினையினை ஒழித்து நம் வாழ்வில் ஒளியேற்று (காரை.சி.சிவபாதம்), சைவசித்தாந்தம் (சோ.ந.கந்தசாமி), தொல்லை வினை தீர்க்கும் நல்லைக் கந்தன் (இராசையா ஸ்ரீதரன்), தினந்தினம் உன்புகழ் எந்நாவில் ஊறுமே! (கவிஞர் துரையர்), இறைவனின் குழந்தைகள் நாம் (க.சிவசங்கரநாதன்), ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானம் (இ.அன்னலிங்கம், வ.கணேசமூர்த்தி) ஆகிய ஆக்கங்களும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Diese besten Erreichbar Casinos qua PayPal 2024

Content Casino Frankfred Kein Einzahlungsbonus – Spielbanken Wie klappen unser Bonusangebote within Echtgeld Casinos? Kommentare dahinter „Spielautomaten qua diesem höchsten RTP (Return to Player/Auszahlung)“ Gibt