ஆறுமுகம் கந்தையா (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: அஷ்டலக்ஷ்மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: ComPrint, 40, Shoe Road).
(8), 106 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 20×14.5 சமீ.
சித்ரா பௌர்ணமியும் சித்ரகுப்த பூஜையும், சித்திராபுத்திர நாயனார் கதை (செய்யுளும் உரைநடையும்), அமராவதி கதை (செய்யுள்) ஆகிய மூன்று கதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. சைவாலயங்கள் தோறும் சித்திரை மாத பூரண திதியில் சித்திரபுத்திர நாயனாரினுடைய கதையை படித்து பயன்சொல்லி சித்திரைக் கஞ்சி வார்ப்பது வழமை. இறைவனுடைய திருவுள்ளப் பாங்கின் வண்ணம் மக்கள் செய்கின்ற பாவ புண்ணியங்களை ஆவணப்படுத்துவது சித்திரபுத்திர நாயனாரினது பணி என்பது ஐதீகம். அவரது கதையை படித்துப் பயன் சொல்லப் போதிய நூல்கள் கையிருப்பில் இல்லாத நிலையில் கைதடி, அஷ்டலக்ஷ்மி பதிப்பகம், தமது சமூகப் பணிகளுள் ஒன்றாக இப்பதிப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது.