சுதந்தரி சஷாந்தன். யாழ்ப்பாணம்: வு.சஷாந்தன், நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).
viii, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15.5 சமீ.
நல்லூர் முத்துக்குமாரசுவாமி பேரிற் பாடப்பெற்ற பிள்ளைத் தமிழ். காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலாட்டுப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றில் சிதைத்தல், சிறுபறைப் பருவம், சிறு தேர்ப் பருவம் ஆகிய தலைப்புகளின் வழியாக இப் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் 108 பாடல்களாக இயற்றப்பட்டுள்ளது. நூலாசிரியர் வித்துவான் க.சொக்கலிங்கத்தின் (சொக்கன்) மகனின் வழிவந்த பேர்த்தியாவார்.