16158 மாதாவின் மந்திரம்.

எஸ்.ஆறுமுகம். கொழும்பு 5: எஸ்.ஆறுமுகம், 4/71, பொல்ஹெங்கொட வீதி, தலக்கொட்டுவ, 1வது பதிப்பு, 1982. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

இச்சிறுநூலை ஆசிரியர் வெளிநாடுகளில் வளரும் தமிழ்ச் சைவச் சிறார்களுக்கென தமிழ் ஆங்கில மொழிகளில் தயாரித்து வெளியிட்டுள்ளார். சைவ சமய பக்தி இலக்கியங்களையும் அதன் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்துவதுடன் சைவ சமயம் பற்றிய பல்வேறு சிறு  கட்டுரைகளை ஆங்கில மொழியில் சிறுவர்களுக்கேற்றவகையில் எழுதித் தொகுத்துள்ளார். முதலாவது பிரிவில் விநாயகமூர்த்தி, சரஸ்வதி அம்பாள், சிவபெருமான், தேவாரம், நடராசப் பெருமான், அம்பாள்,  இராமபகவான், முருகமூர்த்தி, முருகமூர்த்தி பாடல்,  தீபாராதனை ஆகிய தலைப்புகளில் தமிழ் ஆங்கில மொழிகளில் ஆக்கங்கள் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பிரிவில் விநாயகர் பாடல்கள், ஒளவையார் பாடல்கள், நவராத்திரி பிரார்த்தனை, சிவ வழிபாடு-திருஞான சம்பந்த சுவாமிகள் தேவாரம், திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம், திருமுறைகள், திருநடனப்பாடல், அம்பாள் பாடல்கள், வைஷ்ணவ பாடல்கள், கந்தபுராணம், திருப்புகழ் ஆகிய தலைப்புகளில் அமைந்த பாடல்களும் கட்டுரைகளும் இரு மொழிகளிலும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Mr Bet App Spielsaal App Spiele je Android, iOS

Content Entsprechend vermögen Die leser inoffizieller mitarbeiter Mr. Bet nach einem Mobilfunktelefon vortragen? Vor- und Nachteile ein Verwendung und mobiler Version Diese beste Zusätzliche je