சு.செல்லத்துரை. சுன்னாகம்;: சைவப் புலவர் சு.செல்லத்துரை அவர்களின் அந்தியேட்டி தின வெளியீடு, வேலவளவு, ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).
vi, 292 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
சைவப் புலவர் செல்லத்துரை அவர்கள் வானொலிக்கு வழங்கிய மற்றும் அவரது நூல்களில் வெளிவராத நற்சிந்தனைகள், சமயச் சொற்பொழிவுகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் முற்றுப்பெறாத சில ஆக்கங்களையும் அவரே தயாரித்து வைத்திருந்த அவரின் வாழ்;க்கைக் குறிப்புகளையும் எடுத்துத் தொகுத்து அவரது அந்தியேட்டி தின வெளியீடாக இந்நூலில் வழங்கியிருக்கின்றனர். அமரர் சு.செல்லத்துரை அவர்கள் ஆண்டுதோறும், தன் துணைவியாரின் நினைவாக நூல்களை வெளியிடுவது வழமை. இவ்வாண்டும் தன் துணைவியாரின் 11ஆம் ஆண்டு நிறைவினையொட்டி ‘கொறொனா” பெருந்தொற்றின் அவலத்தில் எல்லோரும் அல்லலுறும் வேளை துன்ப நீக்கம் பெற ஓதுதற்காய் வெளியிடவென தயாரித்து வைத்திருந்த ‘துயர் துடைக்கும் சைவத் திருமுறைப் பதிகங்கள்” என்ற தொகுப்பும் இங்கு ஆரம்பத்திலேயே சேர்க்கப்பட்டுள்ளது. இறுதியாக, அறிஞர்கள், நண்பர்களின் பார்வையில் சைவப்புலவர் பற்றிய நினைவுகளின் தொகுப்பாக இவர்களது நினைவுப் பகிர்வுகளையும் இணைத்து அன்னாரின் குடும்பத்தினர் இந்நூலை முழுமைப்படுத்தியிருக்கின்றனர்.