16195 உறுதிகொண்ட நெஞ்சினாள்.

ஹம்சகௌரி சிவஜோதி. லண்டன் IG5 0RB : தேசம் பதிப்பகம்இ 225, Fullwell Avenue, Clayhall, Illford, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.ஆர். இன்டஸ்ட்ரீஸ், இல. 7, உடுவில் மகளிர் கல்லூரி மேற்குத் தெரு, உடுவில்).

(12), 114 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5சமீ.

கிளிநொச்சி லிற்றில் எயிட் (Little Aid) திறன் விருத்தி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றும் ஹம்சகௌரி இலங்கையின் சமகால தமிழ்ப் பெண் ஆளுமைகளைப் பற்றிய நேர்காணல்களையும், கட்டுரைகளையும் இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார். செல்வி திருச்சந்திரன் (பெண்ணியவாதி), ஜெயா மாணிக்கவாசகன் (கல்வித்துறை), தாமரைச்செல்வி (இலக்கியவாதி), பிரேமளா சிவசேகரம் (இலங்கையின் முதலாவது பெண் பொறியியலாளர்), சசிகலா குகமூர்த்தி (கல்வியியலாளர்), பார்வதி சிவபாதம் (கலைஞர்), கலாலக்ஷ்மி தேவராஜா (அரங்கச் செயற்பாட்டாளர்), அகிலத்திருநாயகி சிறிசெயானந்தபவன் (விளையாட்டுத்துறை வீராங்கனை), வலன்ரீனா இளங்கோவன் (கல்வித்துறை), நாகம்மா செல்லமுத்து (அரசியல்வாதி) ஆகிய ஆளுமைகள் பற்றிய தனது பார்வையை இந்நூலில் ஹம்சகௌரி பதிவுசெய்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்