16197 மாற்றங்களின் முகப்புகள் : இலங்கையில் பெண்கள் 1986-1995.

சிவா சுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5 : பெண்கள் ஆராய்ச்சி நிலையம், CENWOR, 225/4, கிருள வீதி, 1வது பதிப்பு, ஜீலை 1995. (கொழும்பு 6: வின்னர்ஸ் அச்சகம், 30, நிஹால் சில்வா மாவத்தை, கிரிலப்பனை). 

(6), 579 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15 சமீ., ISBN: 955-9052-49-7.

இலங்கையில் பெண்கள் பற்றிய 15 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. அறிமுகம் (சுவர்ணா ஜெயவீர), சட்டத்தின் மூலம் பாலியல் நியாயத்தை நிலைநாட்டுதல்: நைரோபி தசாப்தத்தையடுத்த காலப்பகுதியில் இலங்கையின் அனுபவம் (சாவித்திரி குணசேகர), பெண்களின் சுகாதாரமும் போஷாக்கு நிலையும் (பிறியானி ஈ.சொய்சா), பெண்களும் கல்வியும் (சுவர்ணா ஜெயவீர), விஞ்ஞான தொழில்நுட்ப துறைகளில் பெண்கள் (நிமலா ஆர். அமரசூரிய), பெண்களும் தொழிலும் (சுவர்ணா ஜெயவீர), இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள்: போக்கும் பிரச்சினைகளும் (மல்சிறி டயஸ், நேத்திரா வீரக்கோன்), இலங்கையில் பெண்களின் அரசியல் பங்களிப்பு 1985-1995 (விமலா டீ சில்வா), சமூகச் செயற்பாட்டில் பெண்களின் சேவையாற்றுகை (கமலா பீரிஸ்), பெண்களுக்கெதிரான வன்முறைகள்: ஒரு தசாப்தத்தின் மீளாய்வு (சுவர்ணா ஜயவீர), பெண்களும் சூழலும் – நைரோபிக்குப் பிற்பட்ட ஆண்டுகள் (காமினி மீதெனிய விதாரண), ஆய்வும் தகவல்களும் (லீலாங்கி வணசுந்தர), பெண்களும் வெகுஜனத் தொடர்பு சாதனங்களும்- ஸ்ரீலங்கா: நைரோபியிலிருந்து பெய்ஜிங் வரை (சுனிலா அபயசேகர), இலங்கையில் பெண்கள் இயக்கம்: பத்தாண்டுக் காலம் பின்நோக்கிய பார்வை (குமாரி ஜயவர்தன), பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் உணர்வுகள் (சுவர்ணா ஜெயவீர) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அ.சிவராஜா, ரி.சபாரத்தினம், எஸ்.மாணிக்கராஜா, பீ.குலசிங்கம், பத்மா சபாரத்தினம், தவமணி சிவரத்தினம், என்.சிதம்பரநாதன், பி.சிவகுருநாதன் ஆகியோர் தமிழாக்கம் செய்துள்ளனர்.

ஏனைய பதிவுகள்