நூருல் அயின் நஜ்முல் ஹீசைன். பத்தரமுல்லை: சல்மா பதிப்பகம், ‘சிமாக் மஹால்”, இல. 3, ரிச்சார்ட் டீ சொய்சா ஊடகவியலாளர் வீடமைப்புத் திட்டம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 456 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1000., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-3694-01-0.
கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹீசைன் கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையின் ஊடகத்துறையில் உலாவருபவர். வானொலியில் அறிமுகமாகி, பத்திரிகைத்துறையில் காலூன்றியவர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும்மொழிகளிலும் படைப்பாற்றல் பெற்றிருந்த முஸ்லிம் பெண்களை, சிறுகதை-கவிதை-புதினம்-கட்டுரை எனப் பல்வேறு தளங்களிலும் சுவடுகள் பதித்துள்ள ஆளுமை பெற்றிருந்தும் பெரும்பாலும் இலை மறை காய்களாகவிருந்த ஏராளமான முஸ்லிம் பெண்களை இந்நூலில் பெருஞ் சிரத்தையுடன் ஆவணப்படுத்தியிருக்கிறார்.