செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6 : பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
v, (3), 113 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ., ISSN: 1391-0027.
இதழாசிரியரின் முகவுரையுடன் தொடங்கும் இவ்விதழில் எட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொழிக் கட்டமைப்பில் பெண்-அன்றும் இன்றும் (விஜிதா திவாகரன்), பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் (பகீரதி மோசேஸ்), பறை-நீதிக்கான பறை: பெண்நிலைவாதிகளாகப் பறையறைவோரின் ஓர் அனுபவம் (க.நிரோஷினிதேவி, த.கார்த்திகா), பாலியல்சார் வீட்டு வன்முறைகளின் பாதிப்பு-இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையினை குறித்த கள ஆய்வு (கென்னடி ஜி.டெசீனா, சு.சுஜேந்திரன்), வீட்டு வன்முறைக்குள்ளான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்: ஒரு சமூகவியல் ஆய்வு-கருவப்பங்கேணி கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (சந்திரசேகரன் சசிதரன்), பெண்ணிலைவாத அரங்கச் செயற்பாடுகளும் அதனுடன் இணைந்த கலைகளின் வகிபாகமும்-ஓர் ஆய்வு (து.கௌரீசன்), பால்நிலை பகுப்பாய்வு-1: கொக்கிளாய் கடனீரேரி பிராந்தியம் (பகீரதி ஜீவேஸ்வரா ராசனன்), கிரேக்க சிந்தனையில் பெண்மை-ஒரு மெய்யியல் நோக்கு (இ.பிரேம்குமார்) ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நிவேதினி இதழின் உதவி ஆசிரியராக ஜெயமாலா சிவச்செல்வம் பணியாற்றியுள்ளார். ஆசிரியர் குழுவில் தேவகௌரி சுரேந்திரன், மகேஸ்வரி வைரமுத்து, நீலா தயாபரன், ஆனந்தி சண்முகசுந்தரம், வசந்தி தயாபரன், லறீனா ஹக், வ.மகேஸ்வரன், எஸ்.யோகராஜா, நதீரா மரியசந்தனம்ஆகியோர் பணியாற்றியுள்ளனர்