முகுசீன் றயீசுத்தீன் (Muhuseen Raisudeen). சிலாவத்துறை: முசலி இளைஞர் ஒன்றியம், முசலி, 1வது பதிப்பு, ஜீலை 2014. (கஹடோவிட்ட: எம்.எஸ்.எம்.சினான்).
x, 197 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-7555-00-3.
இந்நூல் இலங்கையின் அரசியல் வரலாற்றுப் படிமுறையை ஒரு சீரான முறையில் விளக்குவதுடன் தற்கால அரசியல் விவகாரங்களை அதிகளவு விமர்சனரீதியாக ஆராய்கின்றது. அரசியல் சூழ்நிலைகளை தெளிவாக வெளிக்காட்டுவதுடன் அரசியல் விஞ்ஞானக் கற்கையில் ஈடுபடுபவர்களுக்கும் குறிப்பாக க.பொ.த. (உயர்தர) அரசியல் விஞ்ஞான பாடத்திட்டத்தின் பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கும் உதவும் நோக்கை மையமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் அரசியல் விஞ்ஞானக் கற்றல்-கற்பித்தல், பரீட்சை மதிப்பீடு, பத்திரிகைத்துறை என்பவற்றின் மூலம் ஆசிரியர் பெற்றுக்கொண்ட அறிவும் அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி, டொனமூர் அரசியல் திட்டம்-1931, சோல்பரி அரசியல் திட்டம்-1947, முதலாம் குடியரசு அரசியலமைப்பு-1972, இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு-1978 ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60695).