16208 ஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள் : மார்க்சியப் பார்வை.

சிறிதுங்க ஜயசூரிய (தொகுப்பாசிரியர்). கொழும்பு 5: செந்தாரகை பதிப்பு, ஐக்கிய சோசலிச கட்சி, இல. 53/6> E.D. Dhabare Mawathe,  நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, மே 2019. (பத்தரமுல்ல: நெப்டியூன் அச்சகம், இல. 302, பஹலவெல வீதி, பெலவத்த).

220 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-52663-1-4.

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து பத்து வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் வெளிவந்துள்ள இந்நூலில் கடந்த பத்து வருடங்களில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கு எதிராக ஐக்கிய சோசலிசக் கட்சியால் நடத்தப்பட்ட பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை முன்நிறுத்தி கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான “செந்தாரகை”யில் வெளியான தேர்ந்த ஐம்பத்தி இரண்டு கட்டுரைகளின் தொகுப்பு. மார்க்சியத்தை வெற்றுக் கோட்பாடாகப் பார்க்காமல் செயன்முறையில் எவ்வாறு அதனை அமுல்படுத்துவது என்பதை ஒரு அமைப்பு முன்வைக்கும் கருத்துக்கள் மற்றும் திட்டமிடல்களில் பார்க்கலாம். ஒரு புரட்சிகர அமைப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசியப் பிரச்சினை சார்ந்த விடயங்களை எவ்வாறு அணுகியுள்ளது என்பதை இந்த நூலில் பார்க்கலாம்.  தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டங்கள் வழங்கும் படிப்பினைகள் என்ன- நடந்தவை என்ன- நாம் செய்யவேண்டியவை என்ன என்பவை பற்றிய சிறந்த உரையாடலைத் தொடங்கி வைக்க இந்த நூல்  உதவுகின்றது.

ஏனைய பதிவுகள்