சாரதாஞ்சலி மனோகரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: வளிவளங்கள் முகாமைத்துவம் மற்றும் தேசிய ஓசோன் அலகு, சுற்றாடல் அமைச்சு, ‘சோபாதம்பியச”, இல. 416/c/1, றொபேர்ட் குணவர்த்தன மாவத்தை, பத்தரமுல்லை, 5ஆவது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(6), 96 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
இந்நூலானது உயிர்க்கோளத்தின் பாதுகாப்பில் ஓசோன் படையின் முக்கியத்துவத்தையும் ஓசோன் படை, ஓசோன் படையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச, தேசிய கடப்பாடுகளையும் எடுத்துக்கூறுவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது. வியன்னா உடன்படிக்கை, மொன்ட்றியல் உடன்படிக்கை ஆகியவற்றை ஓர் அங்கத்துவ நாடாக இலங்கையில் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஓசோன் படையைப் பாதுகாப்பதற்கு இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் பற்றியும் விளக்குவதாக அமைகின்றது. இவை வளிமண்டலமும் நாமும், ஓசோன் படை, ஓசோன் படையைப் பாதுகாக்கும் சர்வதேச அர்ப்பணிப்புகள், ஓசோன் படையை நலிவடையச் செய்யும் பதார்த்தங்கள், இலங்கையும் மொன்ட்றியல் உடன்படிக்கையும், பசுமைத் தொழில்நுட்பமும் குளிரூட்டி வளிப்பதனாக்குதல் துறையும் ஆகிய ஆறு இயல்களில் எழுதப்பட்டுள்ளன.