16225 யானைகள்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை).

43 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-98297-1-8.

ஏ.எம்.றியாஸ் அஹமட் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். இலங்கையின் முக்கிய சூழலியல் பிரச்சினையாக மாறிவரும் வன விலங்குகள்- கிராமவாசிகள் மோதல் பற்றிய சூழலியல் காரணிகளை இச்சிறுநூலில் ஆராய்ந்துள்ளதுடன், யானைகள் எவ்வாறு இயற்கையின் வனச் சமநிலை-பரிபாலனத்திற்கு உதவுகின்றன என்றும் விளக்கியுள்ளார். ‘உயரக் கிளைகள் முறிந்து கிடக்கும். உரிமையாய் விலங்குகள் அரைத்து உண்ணும். பதைத்த உயிர்கள் பசி போக்கும், பாதங்கள் பதித்து பள்ளங்கள் உருவாக்கும், குட்டையாக மாறும் பின்னர் குளங்களாகும், நீர் கொடுக்கும். தகித்த உயிர்கள் தாகம் போக்கும் கோடையின் கொடுமையோ மெல்லக் குறையும். மலையாய் விட்டை எங்கும் விரவிப் போடும். காடு சீராட்டி கானுயிர் வளர்க்கும். ஊட்டுவதால் தாயாகி உதவுவதால் நண்பனாகி காப்பதனால் காவலனாகி யானைகள் நம் சூழலின் தோழனாகும்” என்ற அம்ரிதா ஏயெம் அவர்களின் பின்னட்டைக் கவி வரிகள் இந்நூலின் உள்ளடக்கத்தை மேலும் தெளிவாக்குகின்றன.

ஏனைய பதிவுகள்