எஸ்.எல்.மன்சூர். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
vi, 114 பக்கம், விலை: ரூபா 360., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-685-034-5.
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நீண்டகால அனுபவம் கொண்ட எஸ்.எல். மன்சூர் கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகப் பணிபுரிகின்றார். பாடசாலைக் கல்வியில் மாணவர் ஆசிரியர் வகிபங்கு, பாடசாலைகளில் முகாமைத்துவ சீரின்மை, மாணவர் இடைவிலகல் பிரச்சினைகள், பாடசாலைக் கல்வி மீதான நம்பிக்கை, சமூகம் எதிர்பார்க்கின்ற மாணவர்கள், கற்றலில் மொழியின் பங்களிப்பு, எமது கல்வி வளமும், மாணவச் செல்வங்களும், வீடுகளும் கற்றலுக்கான தளங்களே, பாடசாலைக் கல்வியில் பண்புசார் விருத்திக்கான காரணிகள், செயல்வழி ஆய்வில் ஆசிரியர்கள், வறுமையும் கல்வியும், ஆரம்பக் கல்வியில் சுற்றாடல்சார் செயற்பாடுகள், அறிஞர்களது பார்வையில் கல்வியின் முக்கியத்துவம், கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும், மனித மேம்பாட்டுக்கு உதவும் கல்வி, மாணவர்களும் பரிகாரக் கற்பித்தலும் ஆகிய 16 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் தங்கள் கற்றல் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக விளங்கும் வாண்மைத்துவ போக்குகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இந்நூல் தெளிவாக வெளிக்கொணர்கின்றது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றும் நூலாசிரியர் எஸ்.எல்.மன்சூர் சிறந்த விமர்சகராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். இது ஆசிரியரின் ஆறாவது நூலாகும். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27244).