16247 நவீன சர்வதேசக் கல்விச் சிந்தனைகள்.

சோ.சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

viii, (22), 118 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-659-725-7.

நவீன சர்வதேசக் கல்விச் சிந்தனைகளைப் பற்றிப் பேசும் இந்நூல், நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் பின்பின் நவீனத்தவமும், கல்வியின் வங்கிக் கோட்பாடு-மறு வாசிப்பு, பின் நவீனயுகமும் கல்வியும், அவசர நிலைக் கல்வி என்னும் கருத்தாக்கம், சர்வதேச கல்விச் செல்நெறிகள், மனிதவள விருத்தியும் கல்வியும், இரு மடங்காகப் பெருகும் அறிவு: புதிய நூற்றாண்டின் அற்புதம், கல்வித் துறையில் நியாயத்தன்மை, 21ஆம் நூற்றாண்டிற்கான கல்வி: சில அண்மைக்கால ஆலோசனைகள், 21ஆம் நுற்றாண்டுக்கான கல்வியின் பண்புகள், வளர்ந்தோர் கல்விக் கோட்பாடுகள், வலைத் தொகுதிப் பொருளாதாரமும் எண்மப் பொருளாதாரமும், மானிடப் பொருளாதாரச் சிந்தனைகள், மார்க்ஸியத் தத்துவமும் கல்வியும், அல்பர்ட் ஐன்ஸ்டைனின் கல்வி பற்றிய மாற்றுச் சிந்தனைகள், அறிவுப் பொருளாதாரம் சில வரையறைகள், பாடசாலைக் கல்வியில் அழகியல், செயற்கை விவேகமும் கல்விச் செயற்பாடும் ஆகிய 18 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பேராசிரியர் சோ.சந்திரசேகரம் கல்வித்துறையில் நான்கு தசாம்சங்களுக்கு மேலாகப் பணியாற்றியவர். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27271).

ஏனைய பதிவுகள்