ஜீட் பிரகாஷ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 318 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 3500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-6164-35-5.
ஜீட் பிரகாஷ் பாலர் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்ற வேளையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து தற்போது மெல்பர்னில் வாழ்ந்து வருகின்றார். மெல்பேர்ன் சென். ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான இவர் கல்லூரியின் கல்வி மற்றும் விளையாட்டு அபிவிருத்திச் செயற்பாடுகளில் நேரடியாகப் பங்காற்றி வருகின்றார். ‘கல்லூரி நினைவுகள்” (யாரென்றால், அந்தக் காலத்தில், மொக்கு கொமர்ஸ்காரன், பரி.யோவானின் மைதானம், பரி. யோவானில் ஈபிக்காரன்கள், ஒரு நாள் ஜொனியன்ஸ், 1986இல் ஒரு நாள், சதீசன், ஆர்ட் ரூம் கொடுமைகள், விடைபெறும் வரலாறு), ‘கிரிக்கெட் நினைவுகள்” (கனவான கனவு, இலங்கை கிரிக்கெட் அணியும் ஜொனியன்ஸீம், பண்டிதர் கோப்பை 1986), ‘ஆசிரியர்களின் நினைவுகள்” (பரி.யோவானில் தமிழ், ஜீவானந்தம் மாஸ்டர், மகாலிங்கம் மாஸ்டர், ஆறாவடு, துரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம், சரா மாஸ்டரும் அலெக்ஸ் மாஸ்டரும்), ‘நினைவில் நிலைத்தவர்கள்” (மைக்கல், பொப்பிசைச் சக்கரவர்த்தி, அகிலன், நேசா அண்ணா, சூரி, அறிவாளி), ‘SJC92 நினைவுகள்” (தர்மேந்திரா, ஓமென்றா மட்டும், SJC92 கோலாலம்பூர் குதூகலம், பம்பல் @ Phuket, மாவீரர் யாரோ என்றால்) ஆகிய ஐந்து பகுதிகளில் இந்நினைவலைகள் தொகுக்கப்பட்டுள்ளன.