16266 உளவியற் பாங்குகள்.

க.சின்னத்தம்பி (மூலம்), சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: ஜெபவி வெளியீடு, 1வது பதிப்பு, 2020. (வவுனியா: கலைமகள் அச்சகம், இல. 50, சந்தை சுற்றுவட்ட வீதி).

viii, 274 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-624-96829-0-0.

இந்நூலில் பேராசிரியர் க.சின்னத்தம்பி அவர்கள் எழுதிய 25 கல்வி உளவியல் கட்டுரைகள் தேடித் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. உளவியல் அடிப்படைகள், தற்காலப் பிரயோகத்திற்கேற்ப உளவியல் எண்ணக்கருக்கள், எண்ணக்கருவாக்கம், புறூணர் என்பாரின் கருத்துகளும் அவற்றின் கல்விசார் முக்கியத்துவமும், கற்போனின் பல்வகைமையும் வகுப்பறைக் கல்வி அனுட்டானங்களும், கற்போனின் பல்வகைமையும் கல்வி அனுட்டானங்களில் அதன் பிரதிபலிப்புகளும், கட்டிளமைப் பருவம், பதின்ம வயதுப் பருவம் வரையிலான பிள்ளைகளின் உள-சமூக விருத்தி பற்றிய எரிக்சன் என்பாரின் கருத்துகள், உள-சமூக விருத்தி பற்றிய எரிக்சனின் கருத்துகள், பிள்ளைகளின் கற்றலில் நுண்மதியும் கற்றற் பாங்கும், கார்டினர் என்பாரின் பல்வகை நுண்மதிகள், ஸ்ரேன்பேர்க் என்பாரின் மும்முக நுண்மதிக் கொள்கை, நான்கு வகைச் சிந்தனையாளர்கள், தன்னியல் கௌரவம்-வகுப்பறைப் பிரயோகங்கள், கற்றற் பாங்குகளும் கல்விசார் பயன்பாடுகளும், பாடசாலைக் கற்றலும் ஊக்கலும், ஆசிரியரும் கற்றல் தொழிற்பாடும், தொடர்பாடலும் கற்றல் கற்பித்தலும், வகுப்பறை முகாமையும் ஆசிரியரும், சிறப்புத் தேவைகளை வேண்டிநிற்கும் பிள்ளைகளுக்கான கற்பித்தல், சுய ஊக்கலூடாக ஆசிரியர் வாண்மை விருத்தி, கணிதம் கற்பிப்பதில் ஸ்கெம்ப் என்பாரின் கருத்துக்கள், விஞ்ஞானக் கல்வி விருத்திக்கு உதவும் பள்ளிப் புறச்செயல்கள், இசையினூடே முன்பள்ளிக் கல்வியில் விருந்தாரம், பாடசாலைகளில் உடலியற் கல்வி ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Madaliloan Review

Content Easy to practice All to easy to heap opened up An easy task to repay Madali move forward can be a Filipino on the