16336 சித்த வைத்தியம் : பகுதி 1.

திலகேஸ்வரி குமுதரஞ்சன். யாழ்ப்பாணம்: திருமதி திலகேஸ்வரி குமுதரஞ்சன், சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவப் பிரிவு, சித்த மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, சித்திரை 2010. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செட் அச்சகம், நாவலர்மடம், நெல்லியடி).

vii, 206 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19.5×14 சமீ.

உச்சி முதல் உள்ளங்கால்வரை ஏற்படக்கூடிய நோய்கள் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சைமுறைகள் பற்றியும் மிகச்சிறப்பாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோய்க்கான காரணத்தையும் கைவைத்திய முறைகள், சிகிச்சை முறைகள் என்பவற்றை உள்ளடக்கியதாகவும் வருமுன் காப்போம் என்ற தத்துவத்துக்கு ஏற்பவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உணவுப் பழக்கவழக்கங்கள், நாளாந்த செயற்பாடுகள் என்பன பற்றியும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அளவைகள், குடிநீர் செய்முறை, துணை மருந்து, பத்தியம், சுரம், குரற்கம்மல், மூக்கடைப்பு, குருதியழல், இருமல் நோய்,  இரைப்பு, இளைப்பு, தமரகநோய், சுவையின்மை, நீர்வேட்கை, செரியாமை, விக்கல், வாந்தி, மாந்தநோய், குன்மம், சூலை, காமாலை, வெளுப்பு நோய், ஊதல் நோய், குடற்புண் ஆகிய இருபத்திநான்கு நோய்களுக்கான நிவாரணங்களை இந்நூல் வழங்குகின்றது. மேலும் ஏனைய கைமுறை வைத்தியங்களாக, தலைமுடி கருக்க, தலையில் பேன், தலையில் புழுவெட்டு, கண் சம்பந்தமான நோய்கள், பல் சம்பந்தமான நோய்கள், தேகச் சூடு, ஆண்மைக் குறைவு, பெரும்பாடு, மாதவிடாய் உண்டாக, குடற்புழுக்கள் தீர, தோலைப் பற்றிய பிணிகள், வாத நோய், வெள்ளை சாய்தல், நீரெரிச்சல், மூலநோய், நீரிழிவு, சீதக் கரிச்சல், வயிற்றுப்போக்கு அதிசாரம், மலச்சிக்கல், உடல் எடை குறைக்க, மலடு, உடல் வலிமைபெற, சீரான உணவு, கீரை வகை ஆகிய 24 விடயங்கள் தொடர்பான விளக்கமும் தீர்வும் தரப்பட்டுள்ளன. சித்த மருத்துவ கலாநிதி திலகேஸ்வரி குமுதரஞ்சன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 177815).

ஏனைய பதிவுகள்

Put No Deposit Incentive Codes

Content Get the facts: Comparable Bonuses To the 150 100 percent free Revolves No deposit Added bonus Deposit And Withdrawing Financing Local casino Bonusten Käyttäminen