16338 இயற்கை வழி.

செல்வி அ.ஆர்த்திகா (தொகுப்பாளர்). யாழ்ப்பாணம்: இயற்கை வழிச் செயற்பாட்டாளர்கள், எழுதிரள், 209, பலாலி வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

52 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

ஜேர்மன் தூதராலயத்தின் அனுசரணையுடன் Schock-Familien-Stiftung கூட்டுறவில் தயாரித்து விநியோகிக்கப்பட்ட வண்ண விளக்கப்படங்களுடனான கைந்நூல் இது. இதில் இயற்கைவழி விவசாயத்தின் அடிப்படை விடயங்கள், விதைச் சிகிச்சை, பாதுகாக்கப்பட்ட நாற்றுமேடை, சிறுதுண்ட நாற்றுமேடை, நடுகைக்குழி தயார் செய்தல், பூச்சாடிகளில் நடல், விதை/நாற்றுக்களை நடல், நீர்ப்பாசனம், மூடுபடை, சேதனப் பசளைகள், களைகளைக் கட்டுப்படுத்தல், உயிர்க் கரி, நோய்கள், பீடைகள் கட்டுப்பாடு (முக்கியமான மரக்கறிப் பயிர்கள்), மண் தொற்று நீக்கல், விதை/நாற்றுக்களை நேர்த்தி செய்தல், கட்டுப்பாட்டு முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் இயற்கை வழி விவசாய முறைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Safer Online casinos

Posts Legitimate Online slots games Purchase 10, Score 31 Free Spins Researching The fresh Trusted Web based casinos Do-all The newest Kenyan Online casino Internet