16348 கலை வரலாறு : இரண்டாவது இதழ்(ஆடி-மார்கழி 2020).

யோகலிங்கம் நிசாந்தன், ஸ்ரீபன் கிருபாலினி, தாமோதரம்பிள்ளை சனாதனன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கலை வட்டம், நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(8), 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ., ISSN: 2792-1433.

காண்பியக் கலை, காண்பியப் பண்பாடு, மரபுரிமை என்பவற்றுக்கான ஆய்வேடு. இவ்விதழில் அரசியல் முரண்பாட்டுக்குள்ளாகும் திருவள்ளுவர் உருவவியலைக் கட்டவிழ்த்தல் (பிரிந்தா குலசிங்கம்), யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலும் தமிழ் அடையாளமும் (ருக்ஷனா வேலாயுதம்), பறாளைத் தேரினைக் கதைகளின் ஊடாகக் கட்டமைத்தல் (யோகலிங்கம் நிசாந்தன்), யாழ்ப்பாண சேமக்காலை சிற்ப வேலைப்பாடுகள் (யுகேந்திரன் சயந்தன்), மருதமுனை நெசவாளர்கள் (நேர்காணல் பிரவாகினி தர்மலிங்கம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14750 என்றும் ஒளிரும் விளக்கு.

திக்குவல்லை கமால். பண்டாரகமை: பரீதா (Fareedha) பிரசுரம், 104, அத்துலுகம, 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). (9), 10-98 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ.,