16350 இந்து திருக்கோவிற் கலை.

சபா. உமாபதி  சர்மா. யாழ்ப்பாணம்: ஞானரத்தினம், சிவன் கோவில், சித்தன்கேணி, 2வது பதிப்பு, பெப்ரவரி 2009, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (யாழ்ப்பாணம்: சரணியா ஓப்செட் பிரின்டர்ஸ், காசிப்பிள்ளை கட்டிடம், சங்கானை).

x, 100 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

இந்துக்கள் கலையைப் பேரின்ப சாதனமாகக் கொள்கின்றார்கள். இதனை இறையின்பம் தரும் மோட்ச சாதனமாக இறைமார்க்க ஊடகமாகப் போற்றுகின்றனர். அத்தகைய கலைகளில் திருக்கோவில்களோடு இணைந்து காணப்படும் கட்டிட, சிற்ப, விக்கிரக, இசை, நடனக் கலைகள் பற்றியும் அவற்றின் சிறப்பியல்புகளும் மற்றும்அவை ஆலயங்களோடு கொண்டுள்ள தொடர்புகள் பற்றியும் அவை காலந்தோறும் பெற்ற வளர்ச்சி பற்றியும் இந்நூலில் 14 கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. கலை பற்றிய அறிஞர்களது கருத்தும் இந்துக் கலையின் சிறப்பியல்புகளும், குப்தர் கால கட்டிடக் கலையின் சிறப்பம்சங்கள், தென்னாட்டில் இந்துக் கோயில்கள் தோற்றமும் வளர்ச்சியும், பல்லவர் கால கட்டிடக்கலை புலப்படுத்தும் திராவிடக் கட்டிடக் கலையின் ஆரம்ப நிலை, கட்டிடக் கலையின் உன்னத நிலையை வெளிப்படுத்தி நிற்கும் சோழர்கால ஆலயங்கள், நாயக்கர்கால கட்டிடப் பாணி, இந்து விக்கிரகவியலின் மூலகங்கள் பற்றிய சான்றாதாரங்கள், இந்துப் பண்பாட்டு மரபில் திருவுருவ வழிபாடும் வளர்ச்சியும், தென்னிந்திய திருக்கோயில்களை மையமாகக்கொண்டு இந்துப் பண்பாட்டை வளம்படுத்திய விக்கிரகக் கலை, காலம்தோறும் எழுச்சிபெற்ற சிற்ப வகைகளும் அதன் சிறப்பியல்புகளும், இறைவனை அடைவதற்குரிய சிறந்த சாதனம் இசை, இந்துக்கோயில்களில் நடனக் கலையின் வளர்ச்சி, இந்துப் பண்பாட்டை வளர்த்தெடுத்த ரிஷி குலத்தினர், ஈழத்தில் நாக வழிபாடு ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Norges beste online casino bruksanvisning!

Content Spill Bas Beste Freespins i tillegg til gratisspinn Bonuser Betalingsmetoder i Norge Juridisk forbilde igang nettcasinoer Norge Elveleie autorisere kryptovaluta som betalingsmåte indre sett