16358 இறையும் இசையும்.

ஆறுமுகம் முருகேசு. கொழும்பு 6: திருமதி சிவசோதி அம்மா முருகேசு, 19, 6/1, ஈ.எஸ்.பெர்ணான்டோ மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜீலை 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xvi, 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-98138-0-9.

இந்நூலில் அமரர்ஆறுமுகம் முருகேசு தான் வாழ்ந்த காலத்தில் (90களின் நடுப்பகுதிகளிலிருந்து) ஈழத்தில் தான் தரிசித்த, தன்னை ஈர்த்த ஈழத்துச் சிதம்பரம், நகுலேஸ்வரம், நயினை நாகபூசணி, தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி, மட்டுவில் பன்றித் தலைச்சி அம்பாள், பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள்,  நல்லூர்க் கந்தன், சந்நிதி முருகன், மாவைக் கந்தன் ஆகிய சைவாலயங்கள் பற்றியும், கலாநிதி மு.பஞ்சாபிகேசன், கலாநிதி என்.கே.பத்மநாதன், கலைமாமணி எஸ்.எஸ்.சிதம்பரநாதன், லயஞான குபேரபூபதி வி.தட்சணாமூர்த்தி, லயஞான கலாநிதி என்.குமரகுரு, அளவையூர் கணேசரத்தினம், மிருதங்கபூபதி ஆ.சந்தானகிருஷ்ணன், டாக்டர் நித்தியஸ்ரீ மகாதேவன் ஆகிய சங்கீதக் கலைஞர்கள் மற்றும் தவில், நாதஸ்வரக் கலைஞர்களின் வித்துவச் சிறப்புகள், ஆடிவேல் விழா நாதஸ்வரம், கம்பன் கழக இசைவேள்வி, சிட்னியில் இசை நிகழ்வு, ஈழத்துச் சிதம்பரத்தில் கௌரவிப்பு, தவில் நாதஸ்வர வாத்தியங்கள், இதம் தரும் இசை ஆகிய தன்னைக் கவர்ந்த சங்கீத இசை நிகழ்வுகள் என்பன பற்றியும், தான் கல்வி கற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா குறித்தும் இவர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கலைமாமணி ஆறுமுகம் முருகேசு (06.06.1937-04.05.2021) இலங்கை தபால் சேவையில் இணைந்து முதலாம் தர அஞ்சல் அதிபராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

16222 தோட்டத் தொழிலாளர் வீரப் போராட்டம்.

பி.ஆர்.பெரியசாமி. கொழும்பு 12: நல்வழிப் பதிப்பகம், 22. டயஸ் பிளேஸ், 1வது பதிப்பு, 1957. (கொழும்பு 12: என்.எஸ்.ஆர்.அச்சகம், 127, புதிய சோனகத் தெரு). 112 பக்கம், விலை: 50 சதம், அளவு: 22×15