16360 ஏழு ஸ்வரங்கள் : பாகம் 1.

வாசஸ்பதி ரஜீந்திரன். யாழ்ப்பாணம்: சாரங்கம் இசை மன்றம், நல்லூர், 1வது பதிப்பு, ஜீன் 2020. (யாழ்ப்பாணம்: சீ.கே.ஜே. பிரின்ட் கிராப்பிக்ஸ்).

(10), 141 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ.

இசைப் பாரம்பரியப் பின்புலம் கொண்டவரான திருமதி வாசஸ்பதி ரஜீந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் கற்றுத் தேர்ந்தவர். மேடைக் கச்சேரிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாகத் தன் திறமையை வெளிக்காட்டி வருபவர். யாழ். நல்லூரில் ‘சாரங்கம் இசை மன்றம்’ என்ற பெயரில் இசை வகுப்புகளை நடத்திவருபவர். செயன்முறை, அறிமுறை விடயங்களில் நிறைந்த அறிவைப்பெற்ற இவர்  தனது அனுபவ ஞானத்தை மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் வகையில் இரண்டு பாகங்களில் ‘ஏழு ஸ்வரங்கள்” என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் முதலாவது பாகமாகும். இதில் சிறு குறிப்புகள், பிரக்ருதி விக்ருதி ஸ்வரங்கள், சப்தஸ்வரங்களின் விபரம், பன்னிரெண்டு ஸ்வரதான அட்டவணை, ஜனக இராகம், ஜன்னிய இராகப் பிரிவுகள், வர்ஜ இராகங்கள், வர்ஜ இராகங்களின் பிரிவுகள், வக்ர இராகங்கள், இராகங்கள் பற்றிய சுருக்க விளக்கம், நாட்டார் பாடலின் விளக்கம், லகுவின் ஜாதி பேதம், அப்பியாச வரிசைகளைக் கற்பதன் நோக்கமும் பயன்பாடும், உருப்படி இலட்சணம்-1, இசைக் குறியீடுகள், இராக லட்சணம், பன்னிரெண்டு ஸ்வரஸ்தானம், பதினாறு ஸ்வரப் பெயர்கள், சப்த தாளங்கள் 35 தாளங்களாகிய விபரம், உருப்படி இலட்சணம்-2, அரும்பத விளக்கம், வாக்கேயக்காரர் வரலாறு, ஈழத்து இசைக்கலைஞர், சாபு தாள வகைகள், 72 மேளகர்த்தா இராகங்களும் அவற்றின் அமைப்பும் ஆகிய பாடத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

ruby ports bonuses

Articles TOP-ten the newest British no-deposit gambling establishment bonuses within the April 2024 No deposit 100 percent free revolves Finest On-line casino No deposit Added