சுபா ஷாமினி கந்தசாமி, ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி (தொகுப்பாசிரியர்கள்). நீர்கொழும்பு: ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 293 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-99393-0-1.
இந்நூலில் தமிழக, இலங்கை வாக்கேயக்காரர்கள் பற்றிய சிறு அறிமுக விளக்கங்களுடன் அவர்தம் செவ்வியல் இசைப்பா வடிவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய வாக்கேயக்காரர் வரிசையில் முத்துத் தாண்டவர் (1560-1640), ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (1700-1765), அருணாசலக் கவிராயர் (1711-1779), கோபாலகிருஷ்ண பாரதியார் (1811-1881), ராஜாஜி (1878-1972), சுப்பிரமணிய பாரதியார் (1878-1972), பாபநாசம் சிவன் (1890-1973), சுத்தானந்த பாரதியார் (1897-1990), தண்டபாணி தேசிகர் (1908-1972), பெரியசாமித் தூரன் (1908-1987) ஆகியோர் பற்றிய குறிப்புகளுடன் அவர்களது பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறே இலங்கை வாக்கேயக்காரர் வரிசையில், யோகர் சுவாமிகள் (1872-1964), எப்.எக்ஸ்.சி.நடராசா (1911-1997), பண்டிதர் வி.சி.கந்தையா (1920-), பிரம்மஸ்ரீ ம.த.ந. வீரமணி ஐயர் (1931-2003), சில்லையூர் செல்வராசன் (1933-1995), சங்கீதபூஷணம் எல்.திலகநாயகம் போல் (1941-2009), சங்கீதபூஷணம் சி.முருகப்பா, சங்கீதபூஷணம் அ.இ.ஏரம்பமூர்த்தி, சங்கீதபூஷணம் தா.இராசலிங்கம், அருட்கவி சீ விநாசித்தம்பி ஆகியோர் பற்றிய குறிப்புகளுடன் அவர்களது பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.