16365 களிகம்பு : இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய ஆடற்கலை.

சிராஜ் மஷ்ஹூர், எம்.ஐ.நைஸார். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அக்கரைப்பற்று: மல்டி ஓப்செட் அச்சகம்).

200 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-6135-02-7.

கிழக்கு மாகணத்திலுள்ள முஸ்லீம்களின் தனித்துவமான கலைகளாக பக்கீர் பைத், சீனடி, சிலம்படி, ஷைபுல்லாஹ் விளையாட்டு, ரபான் பைத், களிகம்பு ஆட்டம் போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. முஸ்லிம்களின் அருகிவரும் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான களிகம்பு பொல்லடி காணப்படுகின்றது. குறிப்பாக இறக்காமத்தின் பூர்வீக கலையம்சமாக களிகம்பு பொல்லடி ஆட்டம் காணப்படுகிறது. இந்நூல் களிகம்பு பற்றிய விரிவானதொரு ஆய்வாக அமைகின்றது. இதில் சிராஜ் மஷ்ஹூர் அவர்களின் முன்னுரையுடன், களிகம்பு: இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய ஆடற்கலை, களிகம்பாட்டத்தின் அக்கால நிலையும் தற்போதைய மாற்றங்களும், கிழக்கு மாகாண களிகம்பாட்டப் பாடல்கள், இறக்காமத்தூர் பண்பாட்டுப் பாடல்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் களிகம்பாட்டம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15903 உறுதி குலையாத உள்ளத்தின் நினைவாக: கிருஷ்ணபிள்ளை சிவஞானம்: 1946-2002.

வீ.தனபாலசிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம், 1வது பதிப்பு, ஜனவரி 2003. (கொழும்பு 6: நியூ பிரின்ட் கிரபிக்ஸ், 289-1/2 காலி வீதி, வெள்ளவத்தை). iv, 151 பக்கம், புகைப்படங்கள், விலை: