வேல் ஆனந்தன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்க அமுத விழா வெளியீடு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம்; ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).
90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×16 சமீ.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது 80ஆவது ஆண்டு நிறைவில் அமுதவிழாவையொட்டி ஈழத்தின் மூத்த ஆடல் ஆசான் கலைஞர் வேல் ஆனந்தன் ஆக்கித் தந்த ‘கனவாகிப்போன இசைத் தமிழ்-ஆடல் தமிழ் இலக்கு” என்னும் நூலை வெளியிட்டுள்ளனர். ஆடற்கலைஞர் வேல் ஆனந்தன் 12.02.1941 அன்று நெடுந்தீவில் பிறந்தவர். ‘ஈழத்து ஆடல்” என்ற எண்ணக்கருவுடனான செயலமர்வுகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் முன்நின்று வழிநடத்திய ஒருவர்.