16370 ஆற்றுகை 8-நாடக அரங்கியலுக்கான இதழ்: ஏப்ரல்-செப்டெம்பர் 1997.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).

70 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 21.5×14.5 சமீ.

திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இவ்விதழில், இனி வரும் காலங்களில் நாம் (ஆசிரியர் குழு), அரங்க நடவடிக்கையில் புதிய பரிமாணத்தை நோக்கி-மணல்வெளி அரங்கு (தே.தேவானந்), மைக்கல் செக்கோவ் (இ.ஜெயரஞ்சினி), உயிரினங்களின் நிகழ்த்துக் கலையை கனவு காண்கின்றோம் (வேலு சரவணன்), யாழ்ப்பாண கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு (யோ.ஜோன்சன் ராஜ்குமார்), நூல் நுகர்வு (சந்திரன் நிலவன்), பாறையும் கசிவும்-சிறுவர் நாடகம் (ஜீ.கெனத்), நாராய் நாராய் நாடகப் பயணம்-அனுபவக் குறிப்பு (வை.சிவஜோதி), நிகழ்வும் பதிவும் (கி.செல்மர் எமில்), ‘ஈடியஸ் மன்னன்”-நாடகம் (ஜீ.வதனன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12946 – சோமாஸ்கந்தம் நினைவுமலர் 2003.10.26.

மலர்க் குழு. உடப்பு: நவ இளங்கதிர் நாடக மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5 x 15 சமீ. தனது வில்லிசை