16372 ஆற்றுகை 9-நாடக அரங்கியலுக்கான இதழ் : களம் 7, காட்சி 9, ஜீலை-செப்டெம்பர் 2001.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். ஆசிரியர் குழுவில் யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், தை.கண்ணன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில், தன்னைத் தன்னால் அறியும் அரங்கு (க.ரதீதரன்), யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு -4 (யோ.ஜோன்சன் ராஜ்குமார்), நினைவுகளாகிப் போன கரவெட்டி நற்குணம் (பா.ரகுவரன்), சர்வதேச அரங்கை எதிர்கொள்ளும் சுதேசிய அரங்குகள் (சி.ஜெய்சங்கர்), சுமைத் தணிவுப் பணியில் மரத்தடி அரங்கு (தே.தேவானந்), Theatre and Community in the UK (James Thompson), நவீன அரங்கில் பீற்றர் ப்றூக் (நீ.மரியசேவியர் அடிகள்), நூல் நுகர்வு (அரங்கநேசன்), முகில்களின் நடுவே-நாடகம் (சி.ஜெய்சங்கர்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்