ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி).
72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். ஆசிரியர் குழுவில் யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில், மட்டக்களப்பில் நாடக அரங்கு (சி.மௌனகுரு), நாடகக் கலை ஒரு தனிக்கலை வடிவம் (கந்தையா ஸ்ரீகந்தவேள்), கலைத்தூது கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளாருடன் ஓர் நேர்காணல் (கி.செல்மர் எமில்), ஈழத்தின் வடமோடி-தென்மோடி பிரிப்பும் கருத்துகளும்: ஒரு மறுபரிசீலனை (ச.தில்லை நடேசன்), மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்கில நாடகத்துறையின் அண்மைக்கால வளர்ச்சி (தி.லலினி, அ.ர.பிரான்சீஸ்), வாழ்வனுபவமூடாக ஒரு கலைப்பார்வை (ஜி.பி.பேர்மினஸ்), ஈழத்து அரங்கப்போக்குகள் ஓர் அகஞ்சார் நோக்கு (அரங்கக் கூத்தன்), புதிய நூல் வரவுகள், பட்டங்களுக்கு ஏங்காத பண்பாளன் (சி.மௌனகுரு), 2002இல் ஈழத்து அரங்கில் ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.