16375 ஆற்றுகை 12-நாடக அரங்கியலுக்கான இதழ் : களம் 10, காட்சி 12, டிசம்பர் 2004.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர்;, 28, மாட்டின் வீதி).

80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 40.00, அளவு: 20.5×14.5 சமீ.

திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். ஆசிரியர் குழுவில் யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில், கூத்தரங்கின் புத்துருவாக்கம்: சுதேச நவீனவாதத்தின் திறவுகோல் (சி.ஜெயசங்கர்), நாட்டுக்கூத்து மறுமலர்ச்சி: சில அவதானிப்புகள் (முல்லைமணி), யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு-06, மலையகத் தமிழ்ப் பண்பாட்டில் அர்ச்சுனன் தபசு (அ.ஜெகன்தாசன்), அண்ணாவியார் செபமாலை குழந்தையுடன் ஒரு நேர்காணல் (ஆசிரியர் குழு), கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை: அஞ்சலியாக ஒரு குறிப்பு, (ஜீ.பீ.பேர்மினஸ்), நூல் நுகர்வு (அரங்கநேசன்), அரங்கியலில் புதிய நூல் வரவுகள்), புரிசை கண்ணப்ப தம்பிரானிடம் பெற்ற கற்கை நெறிமுறைகள் (கே.ஏ.குணசேகரன்), கால மாற்றமும் அரங்கத் தேவையும் (பிரான்சீஸ் அமல்ராஜ்), திருமறைக் கலாமன்றம் நடத்திய ஈழத்துக் கூத்து விழா: ஒரு பார்வை (தார்மீகி), நாட்டுக்கூத்தின் எதிர்காலமும் தேசிய அரங்கை நோக்கிய தேடலும் (யோ.யோண்சன் ராஜ்குமார்), அண்மைக்கால அரங்கப் பதிவுகள் (கி.செல்மர் எமில்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17899 கணபதி சுப்பையா வாய்மொழி வரலாறு.

க.பரணீதரன் (நேர்காணல்), தில்லைநாதன் கோபிநாத், (தொகுப்பாசிரியர்). கலாமணி பரணீதரன் (பதிப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி கலைஅகம், 1வது பதிப்பு, கார்த்திகை 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: