ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2006. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர்;, 28, மாட்டின் வீதி).
92 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 20×14.5 சமீ.
திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். ஆசிரியர் குழுவில் யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில், இந்தியத்தனம் நிரம்பிய நவீன நாடகங்கள் (அ.ராமசாமி), அரங்க விமர்சனக் கலை: ஒரு நோக்கு (கந்தையா ஸ்ரீகந்தவேள்), மெய்மை நாடகங்கள் பண்பும் பயனும் (நா.சுந்தரலிங்கம்), பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் நாடகம் (ம.ந.கடம்பேஸ்வரன்), யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு-08 (யோ.ஜோன்சன் ராஜ்குமார்), விமர்சனம்-ஜீவப் பிரயத்தனம் (வெளி ரங்கராஜன்), விமர்சனம்-நீ செய்த நாடகமே (கந்தையா ஸ்ரீகணேசன்), மாற்று ஆற்றலுள்ளோரை அரங்கினூடாக ஆற்றுப்படுத்தும் சுனேரா பவுண்டேஷன் (இ.மோகனராஜ்), அஞ்சலிக் குறிப்பு: அண்ணாவியார் செல்லப்பா நடராசா (காப்பியதாசன்), நூல் நுகர்வு: பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் (ஜே.ஜெயகாந்தன்), அரங்கியலில் புதிய நூல் வரவுகள், கலைவேந்தன் ம.தைரியநாதனுடன் ஒரு நேர்காணல் (ஆசிரியர் குழு), இசை நாடகக் கலைஞர் பாலாமணி அம்மையார் (மு.அம்பிகாபதி), ஸ்பெஷல் நாடக மரபில் நடிப்பு (யோ. றுஜந்தா), அண்மைக்கால அரங்கப் பதிவுகள் (கி.செல்மர் எமில்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.