16380 ஈழத்துத் தமிழ் நாடக நிறுவனங்கள்.

பா.நிரோஷன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 96 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-656-4.

நாடகத்தை இயங்கு நிலையில் பேணி வருவதில் நாடக நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது. அதுவும் தரிதமாகப் பெருகிவரும் தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியும் சினிமாவும் சின்னத்திரையும் மேடை நாடகங்களின் இயங்கியலில் தளம்பலை ஏற்படுத்தியுள்ள சூழலில், மேடை நாடகங்களின் இருப்பியலை உயிர்ப்புடன் முன்னெடுத்துச் செல்வதில் நாடக நிறுவனங்களின் பங்கும் பணியும் இன்றியமையாதது. இந்நிலையில் ஈழத்து நாடக நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் ஒரே நூலில் வெளிவருவது பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், நாடகத்துறைசார் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாய் அமையும். இந்நூலில் திருமறைக் கலாமன்றம், நடிகர் ஒன்றியம், நாடக அரங்கக் கல்லூரி, அவைக்காற்றுக்கழகம், அரங்க செயற்பாட்டுக் குழு, மக்கள் கலை பண்பாட்டு அரங்கு, சரணி கலைக்கழகம், புதிய பண்பாட்டு அமைப்பு, செயற்திறன் அரங்க இயக்கம், மக்கள் களரி, வவுனியா அரங்காலயா மற்றும் சுதந்திர அரங்கு, ஆடுகளம் ஆற்றுகைக் குழு, விருட்சம் அரங்க படைப்பாளிகள், செம்முகம் ஆற்றுகைக் குழு, கட்டியம் ஆற்றுகைக் குழு, களரி அரங்கக் கலை நிதியம், அரங்க ஆய்வுகூடம், புத்தாக்க அரங்க இயக்கம், கலாலயம் குழு, யாழ் களரி, சங்கு கலைக் கழகம், யாழ்ப்பாணம் அரங்கக் கலைக்கழகம், ஆரோகணா அரங்கக் கல்லூரி, நாடகப் பள்ளி, ஏனைய சிறு குழுக்கள் ஆகிய 25 இயல்களில் ஈழத்துத் தமிழ் நாடக நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியநாதன் நிரோஷன் மட்டக்களப்புத் தேசிய கல்விக் கல்லூரியில் நாடகத் துறையில் சிறப்பு சித்தியோடு பட்டம் பெற்றவர். கொழும்பில் நாடகப் பள்ளியொன்றினை நிறுவி பாரம்பரிய, நவீன கலைவடிவங்களைத் தொடர்ச்சியாக மேடையேற்றிவருகின்றார். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் நாடகத்துறை ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Jak stworzyć firmową witrynę stopniowo?

Content Kasyno queen of the nile: Umieszczanie tytułu stronicy profesjonalistów sieciowych Kiedy Błyskawicznie skonstruować witrynę z wykorzystaniem ChatGPT [Przewodnik gwoli początkujących] Zamiary cenowe sieci Web

16878 லண்டன் தமிழர் தகவல்: ஆறு திருமுருகனின் 50ஆவது அகவை பொன்விழா மலர்.

குலமணி (ஆசிரியர்), நா.சிவானந்தசோதி (பதிப்பாசிரியர்). கென்ட், பிரித்தானியா: நா.சிவானந்தசோதி, திருமுருகன் அறிவகம், 41, Haddington Road, Bromley,Kent BR1 5RG, 1வது பதிப்பு, மே 2011. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை). 72 பக்கம்,