16381 உள்ளக வெளியில் அரங்கு : நாடக அரங்கக் கட்டுரைகள்.

கதிரேசு ரதிதரன் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xii, 184 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-52-9.

உள்ளக வெளியில் ஒரு நாடக விழா, ஒரு புத்தகத்திலிருந்து பல புத்தகங்களை நோக்கி, கலைஞர் யோகேந்திரநாதனின் கலை ஆளுமைகள், கலைகளால் புரிந்துணர்ந்து அனுபவித்தல்: கலைஞர் பரக்கிரமநிரியெல்ல பற்றிய குறிப்புக்கள், சண்முகலிங்கம்: ஒரு சமூகத்தின் சாட்சி, ஆற்றுகையில் மெய்ப்பாடுகளின் வெளிப்பாடுகள்: பம்மல் சம்பந்த முதலியாரின் அரங்கியலை அடிப்படையாகக் கொண்ட புலனுசாவல், தமிழ்ப் பாரம்பரிய அரங்கில் புதிய முயற்சி: கண்டனன் சீதையை, காட்சியைச் சொல்லாகவும் சொல்லைக் காட்சியாகவும் ஆக்குதல், நிறம் மாறும் உயிருள்ள சிற்பம், மக்கள் களரியின் நாடகங்கள், கூட்டூம அரங்கின் அனுபவங்கள், நாடகவழி உள ஆற்றுப்படுத்தல், உருவத்திற்கு உணர்வு கொடுத்தல்-இசை நாடகக் கலைஞன் செல்வம் மீதான ஒரு பார்வை, சிறுவர் அரங்கை அணுகுதல், ஒரு நடிகனின் பெருங்குழப்பம் ஆற்றுகையில் தெளிவாகிறது, தன்னைத் தன்னால் அறியும் அரங்கு, ஒரு பயங்கரமே அழகியல் நுகர்வாக – வேள்வித் தீ: ஆற்றுகை

விமர்சனம், பேட்டோல்ட் பிரெச்ட்டின் உணர்ச்சி விரோத அரங்கு, குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடகங்களில் ஈழத்து தமிழ் அரங்கின் தோற்றம், அரங்கப் பிரமையை உடைத்த இடுக்கண் வருங்கால், ஒரு பாவையின் வீடு-1879ம் ஆண்டு 1998ம் ஆண்டில்; ஓர் அபிப்பிராயம், அரங்க விமர்சனம் பற்றி ஓர் அரங்கியல் விமர்சனம், கலையின் எதிர்நிலைக் கருத்தியல் பிரச்சினைகளின் தோற்றுவாய்களில் கலைகளது இருப்பளவு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 23 கட்டுரைகளின் தொகுப்பு. கலாநிதி கதிரேசு ரதிதரன் யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் ‘நாடகமும் அரங்கியலும்” பாடநெறி சார்ந்த மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இந்நூல் 230ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Mega Champion Для Android

Articles Published by: Casino4you Gaming Web sites You to Undertake Paypal Huge Winnings To your Ask yourself 4 Buffalo Harbors Bonus August 1976.” Us money,