16382 நஞ்சு மனிதர்: பனுவலும் ஆற்றுகையும்.

சு.சந்திரகுமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 90 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-624-6164-02-7.

இப்பனுவல் மனிதர்கள் இயற்கை நேயத்துடனும் நற்பண்புடனும் வாழ்வதன் அவசியத்தை மையப்படுத்தியது. இரசாயன வளமாக்கியைப் பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம் மனிதரையும் சுற்றுச் சூழலையும் நாளுக்கு நாள் பாதிக்கிறது. இரசாயன பசளைகளையும் கிருமி நாசினிகளையும் தயாரிப்போர், விவசாயிகளை ஆசைகாட்டி அதற்குள் இழுத்து அடிமையாக்கும் நிலையும், அதற்கு அடிமையாகிய விவசாயி ஒரு கட்டத்தில் தனது மகளின் உயிரையே இழக்க நேரிடுவதும், பின்னர் விவசாயியே சுயமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதும் சுட்டப்படுகிறது. ”உணவே மருந்தாக” என்பதன் தத்துவம் உணர்த்தப்படுகிறது. அத்துடன் இந்நாடகப் பனுவல் உருவான முறை, ஆற்றுகை நிலையில் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முறை, அதற்கான காட்சியமைப்பு, இசையின் இணைவு, வேட உடை ஒப்பனை செய்யப்பட்ட விதம், வீதி நாடக நுட்பங்கள் ஆகியனவும் இந்நூலில் வெளிப்படுகின்றது. மேலும் இதில் எழுத்துப் பனுவலாக்க முறைமையும், வீதிநாடக ஆற்றுகையும், உருவாக்க முறைமையும் தரப்பட்டுள்ளது. பன்னூலாசிரியரான சுந்தரலிங்கம் சந்திரகுமார், நாடகமும் அரங்கியலும் சிறப்புக் கலைமாணி, முதுகலைமாணி, முதுதத்துவமாணி பட்டங்களைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். அங்கு நுண்கலைத்துறையின் தலைவராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Suits step 3 Online game

Articles Have the Newest Information To the Twinmotion And other Systems Regarding the Impressive Environment To possess The Community Do you know the Preferred Baby sitter