த.சந்திரா (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: வெறுவெளி அரங்கக் குழு, நாடகமும் அரங்கக் கலைகளும், நுண்கலைத்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்கழி 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
125 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 24.5×18 சமீ.
”மெய்ப்பாடு” அரங்கவியல்துறைக்கான சஞ்சிகையின் முதலாவது இதழ் 28.12.2009 அன்று யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் வெளியிடப்பட்டது. இவ்விதழில் மெய்யும் பொய்யாகி விடுகின்றபோது (குழந்தை ம.சண்முகலிங்கம்), யாழ்ப்பாண நாடக மேடை (எம்.எஸ்.திருவிளங்கம்), பருத்தித்துறையின் நாட்டைக்கூத்து (உருத்திரன் சுமலதா), அபத்த நாடகமும் ஈழத்து அரங்கும் (பொ.கீதா), பாலேந்திராவின் அரங்கச் செயற்பாடுகள் (ச.நிதர்சன்), ஆற்றுகைக் கலைகள் தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டிய சட்டங்கள் (த.சந்திரா), ஈழத்து நவீன அரங்கும் ஏ.சீ.தாசீசியஸின் நெறியாள்கை முறையும் (தி.தர்மலிங்கம்), கூட்டும அரங்கின் அனுபவங்கள் (க.ரதிதரன்), சாகுந்தலம்-நெறியாளரின் அனுபவங்கள் (நி.கரன்), பாதல் சர்காரின் மூன்றாவது அரங்கு (ப.ரவிசங்கர், க.ரமணன்), நவீன தமிழ் அரங்கும் பம்மல் சம்மந்த முதலியாரும் (பொ.சிவராஜசிவம்), செக்கோவ் என்ற நாடகாசிரியர் (த.சந்திரா), மேற்கத்தேய அரங்கவியலாளர் பேட்டோல் பிரெச்ட்டும் அவரது அரங்க நுட்பங்களும் (சு.தமயந்தி), நவீன நாடக நெறியாளர் அன்ரனின் ஆட்டுவாட் (க.ரமணன்), குறட்டோவ்ஸ்பியின் எளிமை அரங்கில் நடிகன் (த.திரேஜா, பொ.சிவராஜசிவம்), ஒகஸ்தாபோலின் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு (எஸ்.ரி.குமரன்), செவ்விளக்கு ஆற்றுகை நடிகரது அனுபவங்கள் (தி.தர்மலிங்கம், எஸ்.ரி.அருள்குமரன், எஸ்.ரி.குமரன்), பதிவுகள் (உருத்திரன் சுமலதா) ஆகிய அரங்கியல் சார்ந்த ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.