16388 தமிழ்த் திரையுலகு : பிரதான போக்குகளும் மாற்று முயற்சிகளும்.

அத்தனாஸ் யேசுராசா. யாழ்ப்பாணம்: தனிநாயகம் தமிழ் மன்றம், புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்தவக் கல்லூரி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, மே 2003. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

18+(10) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,அளவு: 21×15 சமீ.

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நினைவுப்பேருரையின் ஏழாவது தொடர் 08.05.2003 அன்று கொழும்புத்துறை, புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்தவக் கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது. அவ்வுரையின் எழுத்துப் பிரதி இது. நுழைவாயில், தமிழ்த் திரையுலகு: பிரதான போக்குகளும் மாற்று முயற்சிகளும், Tamil Cinema: Main Trends and Efforts to Reform, தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகள் (எ.செ.கி.மரியதாஸ்), இதுவரை இடம்பெற்ற நினைவுப் பேருரைகள் (ச.யேசுதாசன்), நன்றி நவிலல் (சகோ.ச.யேசுதாசன்),

பேருரை சிறப்புற வாழ்த்துகிறோம் உங்களுக்கு அரியதோர் அழைப்பு, ஏழாவது நினைவுப் பேருரை, திரு.அத்தனாஸ் யேசுராசா அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் சில ஆகிய விடயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16899 கல்வியாளர் ஹக் சேர் : மனித நேயமிக்க ஓர் ஆளுமை.

தமிழ் நேசன் அடிகளார் (தொகுப்பாசிரியர்). மன்னார்: அருட்திரு தமிழ்நேசன் அடிகள், கலையருவி, 1வது பதிப்பு, 2020. (மன்னார்: ட்ரான்சென்ட் பிரின்டர்ஸ்). x, 106 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ., ISBN: