16392 உதைபந்தாட்டப் பிரச்சினைகள்.

 சி.மே.மாட்டீன். யாழ்ப்பாணம் : தமிழ்த் தாய் வெளியீடு, 664, மருத்துவமனை வீதி, 1வது பதிப்பு, மாசி 1994. (யாழ்ப்பாணம்: மாறன் பதிப்பகம், 664, மருத்துவமனை வீதி).

vi, 124 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 21.5×15 சமீ.

இந்நூலில் உதைபந்தாட்ட வரலாறு, உதைபந்தாட்டச் சட்டங்களின் நோக்கம், பிரச்சினை ஒன்று, பிரச்சினை இரண்டு, பிரச்சினை மூன்று, பிரச்சினை நான்கு, ஆட்டக்காரருக்கு அறிவுரை, பார்வையாளருக்கு அறிவுரை, உலகப் புகழ்பெற்ற ஆட்டக்காரர் சிலர், உலகக் கிண்ணப் போட்டி, உங்களுக்குத் தெரியுமா? ஆகிய 11 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதிப் பகுதியில் பிற்சேர்க்கை, உசாத்துணை நூல்கள், கலைச்சொற்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்தவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1940இல் ஜீபிலி கழகத்திற்காக உதைபந்தாட்டத்தை ஆடத்தொடங்கியதிலிருந்து 1992வரை யாழ்ப்பாணம், கம்பளை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களின் முன்னணிக் கழகங்களில் இணைந்து ஆடியுள்ளார். பயிற்சியாளராக 45 ஆண்டுகள் பணியாற்றியதால் பெற்றிருந்த அனுபவங்களின் பயனாக இந்நூலை இவர் எழுதியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27087).

ஏனைய பதிவுகள்

Fl Online casinos

Blogs Ideas on how to Join and you may Gamble from the New york Casinos on the internet | 21bet casino bonus NBA Referees Present