16394 வலைப்பந்தாட்டம்.

பவானி அகிலன். யாழ்ப்பாணம்: திடல் வெளியீடு, 71/2, கச்சேரி நல்லூர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

x, 84 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 24×18 சமீ., ISBN: 978-955-51422-1-21.

வலைப்பந்து ஏழு பேர்கள் அடங்கிய இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஒரு பந்து விளையாட்டு ஆகும். இது பெண்கள் கூடைப்பந்து விளையாட்டின் தொடக்கநிலை பதிப்புகளிலிருந்து உருவானதால் கூடைப்பந்து விளையாட்டுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் 1890களில் இது ஒரு முறையான விளையாட்டாக மேம்படுத்தப்பட்டது. அங்கிருந்து பல நாடுகளுக்குப் பரவியது. பொதுநலவாய நாடுகளில் பரவலாக விளையாடப்படும் இந்த விளையாட்டினை பெரும்பாலும் பெண்களே விளையாடுகின்றனர். இந்நூலில் வலைப்பந்தாட்ட வரலாறு, வலைப்பந்தாட்டத்தை விளையாடுதல், ஆட்டங்களும் ஆட்டத்திறன் விருத்தியும், பந்தை அனுப்புதல் அல்லது  கைமாற்றுதல், பாத அசைவு, பேற்றுக்கெய்தல், தாக்கி ஆடுதல், தடுத்து ஆடுதல், வெளியை உருவாக்குதலும் தந்திரோபாயங்களும் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் வலைபந்தாட்டம் பற்றிய விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக மத்தியஸ்தர்களுக்கான சைகைகள்,  கலைச் சொற்கள் என்பன தரப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26866).

ஏனைய பதிவுகள்

The Birth Alternatives

Posts How to tune my delivery? Other Website Appear Advice Step one: add Hotjar’s tracking code to your website Upgraded fifty 100 percent free Phone