எஸ்.பஞ்சகல்யாணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
56 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5881-70-8.
வைத்தியர் எஸ்.பஞ்சகல்யாணி, புலோலி, பிலாவடித் தெருவைச் சேர்ந்தவர். இச்சிறுவர் பாடல்களினூடாகத் தான் அன்றாடம் காணும் உயிரினங்களை ரசித்து பாடலாக அந்த ரசனையை வடித்துத் தந்துள்ளார். அம்மா, பசு, ஆட்டுக் குட்டி, பூனைக் குட்டி, நாய்க் குட்டி, முயல், நாட்டுக்குள் வந்த நரி, கற்பகதரு, கோழிக் குஞ்சு, சிட்டுக் குருவி, காகம், கூண்டுக்கிளி, வண்ணத்துப் பூச்சி, கரப்பான் பூச்சிக்குக் கல்யாணம், தாலாட்டு, பிறந்தநாள் வாழ்த்து, விளையாட்டு, நொடிப் பாட்டு, நிலா, குளம், கடலும் கரையும், பொங்கல், சைக்கிள் வண்டி, ஆகாய விமானம், தங்கமே தங்கம், தமிழ், நம்நாடு ஆகிய தலப்புகளில் சின்னஞ்சிறு பாடல்கள் 27 இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கான அட்டைப்படத்தை ஆசிரியரின் ஆறு வயதேயான மகள் புராதனி வரைந்துள்ளார். இது 184ஆவது ஜீவநதி வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.