16400 சிறுவர் பாடல் மலர்.

வாசுகி பி.வாசு (இயற்பெயர்: குகராஜசெல்வம் வாசுகிதேவி). கொழும்பு: பூங்காவனம் இலக்கிய வட்டம், 21 E, தர்மபால வீதி, மவுண்ட் லவீனியா, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: சன்ஷைன் பிரின்டர்ஸ், வெள்ளவத்தை).

(4), 30 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 360., அளவு: 28×19 சமீ., ISBN: 978-955-7775-06-7.

முகநூலில் பல குழுமங்களில் நடுவராகவும், கவிஞராகவும் பயணிக்கும் இவர், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவர். தனியார் துறைத் தமிழாசிரியராகவும் பெண்களுக்கான ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றார். ‘சிறுவர் பாடல் மலர்” இவரது கன்னிப் படைப்பாகும். இதிலுள்ள பாடல்கள் எளிமையான சொல்லாடல்களுடனும் ஓசை நயத்துடனும் சிறுவர் உள்ளங்களை வசீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. வண்ணத்துப்பூச்சி, பறவைக்கூடு, பாப்பா பாட்டு, பாயும் அருவி, ஆழ்கடல் கப்பல், மழையின் ஆட்டம், காலைக்காட்சி, சின்னப்பூ பேசுது, அம்மாவின் பாசம், நண்டாரே, காலைச் சூரியன், பனைமரக் கிளி, அம்மாவின் பாச முத்தம், குருவியின் பேச்சு, புகையிரதம் ஆகிய 15 பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14508 ஆரையம்பதிப் பிரதேச நாடக மரபுகள்.

த.மலர்ச்செல்வன். மட்டக்களப்பு: மறுகா, உள்வீதி, ஆரையம்பதி 3, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). ix, 162 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ.,