16401 தமிழ் பாட்டு : சிறுவர் பாடல் தொகுப்பு.

கனகரவி (இயற்பெயர்: கனகரட்ணம் ரவீந்திரன்). சுவிட்சர்லாந்து: ரவீந்திரன் சுபத்திரை, 1வது பதிப்பு, ஜீன் 2012. (சென்னை: மகி தமிழ் அச்சகம், டிசைன் பார்க்).

48 பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

ஈழத்தில் வவுனியா வடக்கில் உள்ள பூந்தோட்டம் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கனகரவி, 1993 முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கியத் துறையிலும் ஈடுபாடு கொண்ட இவரது முதலாவது நூல்  1998இல் வெளிவந்த “விடுதலைக்காய்” என்ற கவிதைத் தொகுதியாகும். தொடர்ந்தும் இந்த மழை ஓயாதோ (2001), பொங்குதமிழ் (2005), ஆழிப்பேரலையும் ஈழத் தமிழரும் (2006)ஆகிய நூல்களையும் வெளியிட்டவர். 2007 இறுதிப் பகுதியில் புலம்பெயர்ந்து, சுவிட்சர்லாந்தில் ஊரி மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார். கனகரவியின் ஐந்தாவது படைப்பாக தமிழ் பாட்டு- சிறுவர் பாடல் தொகுப்பு ஐம்பது சிறுவர் பாடல்களுடன் தற்போது வெளிவந்துள்ளது. புலம்பெயர்ந்து வாழும் இளைய தலைமுறையினரிடையே தமிழார்வத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் இப்பாடல் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Finest No deposit Slots 2024

Content What types of No deposit Bonuses This site Have? Wagering Standards Of 100 percent free 5 No deposit Specialist Decision In the 5 100