16402 பாலர் பாட்டு தொகுதி 1.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, ஆவணி 1984, 1வது பதிப்பு, சித்திரை 1983. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 B A தம்பி ஒழுங்கை).

32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 7.00, அளவு: 25×19 சமீ.

ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்குரிய இசையும் அசைவும் என்னும் பாடத்திட்டத்திற்கு அமைவாக, இயற்கை வனப்பையும் சூழலையும் தழுவி எழுதப்பட்ட பாடல்கள். இவை பிள்ளைகள் கண்டும் கேட்டும் பழகும் தலைப்புகளில் அமைந்ததாக எங்களுடைய வீடு, நல்வரவு, கோழி, புள்ளிப் புள்ளி மயிலே, அப்பா தந்த குதிரை, மிட்டாய், மாம்பழம், பட்டுப் பட்டுப் பாவாடை, அம்மா உடுப்பாள் பட்டு, மாட்டு வண்டி, புகைவண்டி, மழை, பூந்தோட்டம், பாட்டில் நிலைக்கச் செய்திடுவேன், புகைக் கப்பல், வெளிச்ச வீடு, ஆகாய விமானம், பட்டம் ஏற்றுதல், வெண்ணிலா, டும் டும் மேளம், புதுமை அம்மன் கோவிலிலே, மீன்கள், வங்கம் தந்த சிங்கம், மானும் நாயும், மோர், உபகாரம், ஆபத்தில் உதவா நண்பன், உயிர் கொடுத்த உத்தமி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. ஆசிரியராகவும் அதிபராகவும் பல்லாண்டு காலம் பணியாற்றிய அனுபவத்தின் பயனாகப் பாலர்களின் உளவியல்புகளுக்கேற்ற பாடல்களை இந்நூலாசிரியர் வெகு அற்புதமாக இயற்றியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Casinos Sportsbooks Web based poker

Content Financial and you will Costs – Starburst online casino real cash Exclusive Bonuses for Loyal Participants Bonus de bienvenue Although some elite group punters