த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1984. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 B A தம்பி ஒழுங்கை).
32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 7.30, அளவு: 24.5×18 சமீ.
பிள்ளைகளின் சூழலில் உள்ள போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிய பாடல்கள் இத்தொகுப்பில் முக்கியமாக இடம்பெற்றுள்ளன. இனிமையும் எளிமையும் இன்பமும் பொருந்த ஆசிரியர் த.துரைசிங்கம் அவர்கள் இயற்றிய சிறுவர்களுக்கான பாடல்களின் மற்றொரு தொகுதி இது. எங்கள் குடும்பம், பள்ளி செல்வோம், பறவைகள், தேனீ, மலர்கள், தோட்டம் செய்வோம், நிறங்கள், தைப் பொங்கல், புத்தாண்டு, வண்ணத்துப் பூச்சி, பயணம் செய்வோம், மாட்டு வண்டி, குதிரை வண்டி, றிச்சோ வண்டி, சயிக்கிள் வண்டி, மோட்டார் வண்டி, பஸ் வண்டி, புகைவண்டி, கட்டுமரம், கப்பல், வானவூர்தி, தோசையும் ஆசையும், வல்லவனுக்கு வல்லவன், சங்கிலி மன்னன் ஆகிய தலைப்புகளில் இச்சிறுவர் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.