நீர்கொழும்பு தர்மலிங்கம் (இயற்பெயர்: ந.தருமலிங்கம்). நீர்கொழும்பு: நடராசா தர்மலிங்கம், 195, கடற்கரை வீதி, 1வது பதிப்பு டிசம்பர் 1996. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
67 பக்கம், விலை: ரூபா 46.00, அளவு: 22.5×15 சமீ.
சமூகச் சீர்மை, மனிதகுல மேம்பாடுகளுக்காகத் தனது கவிதைகள், கட்டுரைகள் மூலம் ஊடகங்களில் ஓங்கிக் குரல்கொடுத்துவந்த நீர்கொழும்பூர் முத்துலிங்கத்தினால் பல்லினமான 35 தலைப்புக்களில் புனையப்பட்ட சிறுவர் பாடல்கள் இவை. ஆறு பிரிவுகளில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. கலைமகள் வாழ்த்து, பாரதிக்கு ஒரு மடல் ஆகிய பாடல்களைத் தொடர்ந்து சரம் ஒன்றில், கண்ணில் ஒரு கவிதை, கடவுளை மறக்காதே, ‘அ”கர முதல் ஃ வரை, ஒரு தாயின் தாலாட்டு, ஓடிவிளை யாடிமுடி பாப்பா, காலத்தில் கற்றுக்கொள் ஆகிய பாடல்களையும், சரம் இரண்டில், எங்கள் தாய்நாடு, அன்புவழி தேடி ஆடுவோம், பள்ளிக்கூடம் ஒரு கோயில், கல்வி ஒரு தெய்வம், மூத்தோர் சொற் கேட்போம், அருளை உணர்ந்து ஆண்டவனை வணங்கு, சிந்தித்துச் செயலாற்று, உனக்குள் இறைவன், உன்னைத் தேடு, முயற்சிசெய் முடியும், காலம் உந்தன் காலடியில், நம்பிக்கை அது இறைவன் கை, நல்லதைச் செய்யுங்கள்-நன்மையே சேரும் ஆகிய பாடல்களையும், சரம் மூன்றில், வையம் உன்னை வாழ்த்த, விழிப்பிலிருந்து உறக்கம் வரை ஆகிய பாடல்களையும், சரம் நான்கில் காக்கையும் நாயும், சிறுவர்களும் எறும்பும், கிளிக்குஞ்சு புலம்பல், பசுமாமி ஏன் அழுதாள்?, மனிதர்களும் கடவுளும் ஆகிய ஐந்து நாடகப் பாடல்களையும், சரம் ஐந்தில், அழகிசைச் சிந்துகளாக இயற்கையும் இசையும், காலைப் பொழுது மலர்ந்தது, வெண்ணிலாவே விளையாட வா, சின்னச் சின்ன கனவுகள் ஆகிய பாடல்களையும், சரம் ஆறில் இனிக்கும் நினைவுகள், மணக்கும் மனத்திரை, பின்வரியாய் என் வரிகள் ஆகிய பாடல்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது.