உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம்.நிசார்). மாவனல்லை: பானு பதிப்பகம். 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2020. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி).
v, 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 260.00, அளவு: 30×22 சமீ., ISBN: 978-955-0503-20-9.
சிறுவர் இலக்கியத்துக்கு அதிக பங்களிப்பைச் செய்துள்ள உதுமாலெப்பை நிசாரின் 10ஆவது சிறுவர் பாடல் தொகுப்பான “சின்ன ரயில்” தொகுப்பைத் தொடர்ந்து வெளிவரும் பதினொராவது சிறுவர் பாடல் தொகுப்பு இது. இயற்கை, இயற்கையின் எழில், இயற்கையை அவதானித்தல், இயற்கைக்கு மனிதன் செய்யும் தீங்கு, இயற்கையைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு விடயங்களுடன் குடும்பம், செல்லப் பிராணிகள், பொழுதுபோக்குகள், சிறுவர்களுக்கான அறிவுரைகள், நற்பழக்க வழக்கங்கள் என்பவற்றையும் நிசார் இப்பாடல் தொகுப்பில் முன்வைத்துள்ளார். அவை நிலா நான், வீட்டுத் தோட்டம், தம்பிப் பாப்பா, பறந்துவா அக்கா, பூவும் வண்டும், பார் சிறக்க, குரங்குக் குணம், தலை வணக்கம், எங்களூர் ஓடை, மீன் மாமா, வெருளி மாமா, பண மழை, இவர் யார்?, பட்டம் பறக்குது, கொடுக்கல் வாங்கல், ஆட்டுக்குட்டி, தூய்மை காப்போம், அந்தி மயங்குது, மரம் சொல்லும் கதை, கோழிக் குஞ்சாரே, ஆசான் வாழ்க ஆகிய 21 தலைப்புகளில் இவை இயற்றப்பட்டுள்ளன.