16413 சிந்தனை செய் : சிறுவர் கதைகள்.

எஸ்.பஞ்சகல்யாணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-23-9.

பறவைகளின் கூட்டம், வீமாவும் ஜிம்மியும், ஆடும் தேனியும், மானும் முயற்குட்டியும், வானத்தில் நடந்த அதிசயம், வேடனும் மானும், கொக்கும் காகமும், காட்டில் ஒரு வரிப்புலி, சிங்கராசாவின் பெருந்தன்மை, கிளியும் விளாம்பழமும், காகமும் குயிலும், மாம்பழக் குருவியின் நட்பு, வண்ணத்துப் பூச்சியும் தம்பியும், முதலையும் ஆமைகளும், குறும்புக்கார கோழிக்குஞ்சு, கடற்கன்னி, பூவரசும் தேக்கும், சர்ப்பத்தின் செருக்கு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 18 சிறுவர் கதைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. கதைகளின் பாத்திரங்கள் நமது சூழலில் வாழும் விலங்குகளாக அமைவதுடன் அவை மானிட வாழ்வுக்கான போதனைகளை எளிமையாக வழங்குவதாகவும் கதைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பெரியோரைக் கனம் பண்ணுதல், நன்றியுணர்வு, விருந்தோம்பல், நட்பு போன்ற நற்பண்புகளை இக்கதைகள் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. மனிதனால் மாசுறும் பூமி பற்றியும் அவதானத்தை சில கதைகள் ஏற்படுத்துகின்றன. இந்நூல் 205ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15463 அந்தப் பௌர்ணமியில்.

தர்காநகர் பாத்திமா றம்ஸியா. பேருவளை: பேசும் பேனா பேரணி, 26/6, பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (பேருவளை: பொசிட்டிவ் கிராப்பிக்ஸ், 63, பள்ளிவாசல் வீதி). 60 பக்கம், விலை: ரூபா 100.00,

Online Video poker Video game

Blogs Egypt Local casino To possess United states Professionals: Why are Video poker Games Both Called Video poker Ports? Wms Betting Learn more about the