16415 சிறுவர் எழுதிய சிறுவர் கதைகள்.

மு.மேதினிகா, மு.கோகனன் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-20-8.

இவ்விளம் கதைசொல்லிகளும், தொகுப்பாளர்களும் தமது வகுப்பறைகளிலும், மாலை நேர உரையாடல்களிலும் சொல்லப்பட்டுவந்த தமது கதைகளை எழுதித் தொகுத்திருக்கிறார்கள். இவற்றில் சில கதைகள் ‘தீம்புனல்” சிற்றிதழில் வெளியாகியுள்ளன. ஆபத்து உதவியும் உறவின் ஆபத்தும், அழகான விலங்கு, அணிலும் நரியும், தாய் சொல்லைத் தட்டாதே, பிறந்தநாள் பரிசு, திருடனின் நேர்மை, வாத்தின் நட்பு, நரியின் தந்திரம், ஆமையும் கோழியும் முயலும், அண்ணனும் தங்கையும், ரோபோ வாசகன், அதிகேசரிம் மதிகேசரியும், தாத்தாவின் அறிவுரை, தூக்கணாங் குருவியின் கூடு, புத்திசாலி எலி, தும்பியும் கமலனும், அமைதி, நண்பிகளின் பகிர்வு, மஞ்சள் பலூன், காகமும் மயிலும், வண்டின் முயற்சி, மேகங்கள், வீண்பெருமை, தேவதையின் பரிசு, பேராசை பெருநட்டம், வேட்டைக்காரர்களின் ஓவியம், மந்திரியின் மதிநுட்பம், புத்திசாலை ஆடு, போலிச்சாமியார், ஒட்டகத்தின் கெட்ட அகம், பஞ்சாமிர்தக் கனி, இரத்தினக்கல், ஏமாற்றுவோர் ஏமாறுவார், யானையும் குருவியும், கூண்டுக் கிளியும் சோலைக்கிளியும், பெறுமதி, வெள்ளைக்காகம், விக்கிரமாதித்தனும் ரோபோவும், அச்சம் தவிர், மின்குமிழ் சொன்ன கதை ஆகிய 40 கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கதைகளுக்கான ஓவியங்களை த.அக்ஷிதா வரைந்துள்ளார். 201ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது.

ஏனைய பதிவுகள்

Enjoy Free Harbors 777

Content Ash gaming slots online | Get 50percent Around a lot of First Deposit Added bonus Reel Slot Having cuatro Symbols, 20 Paylines Mobile: Use